உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாதுார் அய்யனார் கோவிலில் சுவாமி குதிரை சவாரி உற்சவம்

பாதுார் அய்யனார் கோவிலில் சுவாமி குதிரை சவாரி உற்சவம்

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அடுத்த பாதுார் அய்யனார் கோவில் ஊரணி பொங்கல் உற்சவம் நடந்தது. கடந்த மாதம் 21ம் தேதி காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. தொடர்ந்து 27ம் தேதி இரவு அய்யனார் சுவாமிக்கு, சிறப்பு வழிபாடு நடந்தது. மறுநாள் இரவு சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்து,  வீதியுலா நடந்தது. தொடர்ந்து 12 நாட்களுக்கு சுவாமி இரவு வீதியுலா நடந்தது. நேற்று காலை 8:00 மணிக்கு சிறப்பு ஆராதனைகள், பூஜைகள் நடந்தது. பின்னர், கோவிலில் பொங்கல் வைத்து,  வழிபாடு நடத்தினர். மாலை 5:50 மணிக்கு, ஏரியிலுள்ள அய்யனார் மண்டபம் அருகே குதிரை சவாரி வலமும், பாரி ஓட்டமும் நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். பின்னர், சுவாமி கோவிலை சென்றடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !