உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கள்ளக்குறத்தியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்

கள்ளக்குறத்தியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்

உத்திரமேரூர்:காக்கநல்லுாரில், ஸ்ரீதேவி கள்ளக்குறத்தியம்மன் கோவிலில் மஹா கும்பாபிஷேக விழா நேற்று கோலாகலமாக நடந்தது.உத்திரமேரூர் ஒன்றியம், காக்கநல்லுார் கிராமத்தில், பழமை வாய்ந்த, ஸ்ரீதேவி கள்ளக்குறத்தியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் பழுதடைந்ததை அடுத்து, சில மாதங்களாக அப்பகுதி வாசிகள் சார்பில் புனரமைப்பு பணி நடந்தது. பணி முழுமையாக நிறைவடைந்த நிலையில், நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த, நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !