முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :2948 days ago
கீழக்கரை: கீழக்கரை அருகே பள்ளமோர்க்குளம் முத்துமாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. செப். 9 அன்று முதல்கால யாகசாலை பூஜையில் அனுக்ஞை, விக்னேஷ்வரர் பூஜை, கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி உள்ளிட்டவைகள் நடந்தது. நேற்று காலை 7:00 மணியளவில் கோ பூஜை, நாடி சந்தானம், பூர்ணாகுதி, கடம் புறப்பாடு நடந்தது. காலை 9:30 மணியளவில் சிவாச்சசாரியார் முருகதாஸ் கோபுர கும்பத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தார். அம்மனுக்கு 18 வகையான அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அன்னதானம் நடந்தது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கிராமபொதுமக்கள், இளைஞர் நற்பணி மன்றத்தினர், மகளிர் மன்றங்களை சேர்ந்தவர்கள் செய்திருந்தனர்.