உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநியில் குவிந்த பக்தர்கள்: தரிசனம் செய்ய 2 மணி நேரம் காத்திருப்பு

பழநியில் குவிந்த பக்தர்கள்: தரிசனம் செய்ய 2 மணி நேரம் காத்திருப்பு

பழநி: ஞாயிறு விடுமுறை தினத்தில், பழநி முருகன்கோயிலில் அதிகாலை முதல் குவிந்த பக்தர்கள் 2 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பழநி மலைக்கோயிலுக்கு சனி,ஞாயிறு தினங்களில் அதிகளவில் பக்தர்கள் வருகின்றனர். மலைக்கோயிலில் நேற்று அதிகாலை முதல் குவிந்த பக்தர்கள், ரோப்கார், வின்ச் ஸ்டேஷன்களில் 2 மணிநேரம் காத்திருந்து மலைக்கோயில் சென்றனர். பொதுதரிசனம் வழியில் இரண்டு மணிநேரம்வரை காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனர். இதைப்போல தங்கரதபுறப்பாட்டை காண ஏராளமான பக்தர்கள் திரண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !