பண்ருட்டி வரதராஜ பெருமாள் கோவிலில் சகஸ்ரநாம அர்ச்சனை
ADDED :2945 days ago
பண்ருட்டி: பண்ருட்டி வரதராஜ பெருமாள் கோவிலில் பவித்ர உற்சவத்தையொட்டி, பெருமாள் தாயாருக்கு 1008 தாமரைப் பூக்களால் அர்ச்சனை நடந்தது. உற்சவத்தையொட்டி, கடந்த 8ம் தேதி யாகசாலை பூஜை துவங்கியது. நேற்று முன்தினம் காலை வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. மாலை உற்சவர் வரதராஜ பெருமாள் தாயாருடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 1008 தாமரைப் பூக்களால் சகஸ்ரநாம அர்ச்சனை நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர்.