உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செஞ்சி கோதண்டராமர் கோவிலில் திவ்விய பிரபந்த பாசுரம் நிறைவு விழா

செஞ்சி கோதண்டராமர் கோவிலில் திவ்விய பிரபந்த பாசுரம் நிறைவு விழா

செஞ்சி: செஞ்சி கோதண்டராமர் கோவிலில் நாலாயிர திவ்விய பிரபந்த பாசுர நிகழ்ச்சி, நிறைவு விழா நடந்தது. செஞ்சி சங்கராபரணி ஆற்றங்கரையில் உள்ள கோதண்டராமர் கோவி லில், பாகவதர் குழுவினர் சார்பில், நாலாயிர திவ்விய பிரபந்த பாசுரம் படிக்கும் நிகழ்ச்சி நடந்தது. கடந்த 4ம் தேதி துவங்கிய இதன் நிறைவு விழா, நேற்று நடந்தது. நேற்று காலை கோதண்டராமருக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம், தீபாராதனை செய்தனர். ராமமூர்த்தி திருமால் துதிபாடினார். சபை தலை வர் ஜெயராமன் தலைமை தாங்கினார். அறக்கட்டளை நிர்வாகி துரை பாரதிராஜா முன்னிலை வகித்தார். விழா குழு நிர்வாகி கள் எட்டியாப்பிள்ளை, சுந்தரம், சாமிக்கண்ணு, பெருமாள், அருணகிரி, அப்புபிள்ளை, ராமமூர்த்தி, கிருஷ்ணவேணி, குமார், ஜனார்த்தனன், புருஷேத்தமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் செஞ்சி தாலுகாவை சேர்ந்த பாகவதர்கள், ஆண்டாள் கோஷ்டியினர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !