உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநியில் கொலு பொம்மை விற்பனை

பழநியில் கொலு பொம்மை விற்பனை

பழநி: நவராத்திரி விழாவை முன்னிட்டு, பழநி பகுதியில் கொலு பொம்மைகள் விற்பனைக்கு வந்துள்ளன. நவராத்திரி விழா நாட்களில் வீடுகள், கோயில்கள், தனியார் நிறுவனங்கள், மண்டபங்களில், கொலு பொம்மைகள் அடுக்கி வைத்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபடுகின்றனர். இவ்வாண்டு செப்.,21 முதல் 30 வரை நவராத்திரி விழா நடக்கிறது. இதற்காக பழநியில் கொலு பொம்மைகள் விற்பனை வந்து குவிந்துள்ளன. பழநி சன்னதி வீதி வியாபாரி நாகராஜன் கூறியதாவது: நவராத்திரி கொலுவில் வைக்கப்படும் சுவாமி பொம்மைகள், மாயாபஜார் செட், கிருஷ்ணர் கபடி செட், 18 சித்தர்கள், புராண கதை நாயகர்கள், அப்துல் கலாம் உட்பட பல்வேறு பொம்மைகளை காஞ்சிபுரத்தில் இருந்து வரவழைத்துள்ளோம். ரூ.100 முதல் ரூ. 1,500 வரை தனித்தனி பொம்மைகளும், ரூ. 300 முதல் ரூ.6ஆயிரம் வரை செட் பொம்மைகளும் உள்ளன. புதிய வரவாக திருப்பதி பிரமோற்சவவிழா 10 அலங்கார சிலைகள் வந்துள்ளன” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !