உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோபி பச்சமலை, பவளமலையில் குரு பெயர்ச்சி விழா

கோபி பச்சமலை, பவளமலையில் குரு பெயர்ச்சி விழா

கோபி: கோபி பச்சமலை, பவளமலையில், குருப்பெயர்ச்சி விழா கோலாகலமாக நேற்று நடந்தது. குரு பெயர்ச்சியை முன்னிட்டு, கோபி பச்சமலையில், தட்சிணாமூர்த்திக்கு, நேற்று காலை கலசபூஜை, சிறப்பு பரிகார மகா ஹோமம், பல்வேறு திரவியங்களால், சிறப்பு அபிஷேகம் நடந்தது. குருவுக்கு, 108 சங்காபிஷேகம் நடந்தது. பின் குருப்பெயர்ச்சி சிறப்பு பரிகார அர்ச்சனையில், ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இதேபோல், கோபி பவளமலை முத்துக்குமாரசாமி கோயிலில், குருப்பெயர்ச்சி விழா நடந்தது. இதில், 1,?00க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !