பழநி உண்டியல் எண்ணிக்கை மாதம் இருமுறை நடத்த திட்டம்!
ADDED :5170 days ago
பழநி:பழநி கோயிலில் மாதம் இருமுறை உண்டியல் எண்ணிக்கை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில், அய்யப்ப பக்தர்கள் வருகையால் சீசன் துவங்கியுள்ளது.முன்பு, குறைந்தபட்சம் 40 நாட்கள் இடைவெளியில் உண்டியல் எண்ணப்பட்டது. எண்ணிக்கை பணிக்கான ஊழியர்கள் போதிய அளவு இல்லை. இதனால், சில நேரங்களில் இரண்டு நாட்கள் வரை வசூல் எண்ணும் பணி நடந்தது.தற்போது இதனை முறைப்படுத்த கோயில் நிர்வாகம் முடிவு செய்து, மாதமிருமுறை உண்டியல் எண்ணும் பணியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.