வீணை இல்லா சரஸ்வதி!
ADDED :2953 days ago
வேதாரண்யம், கங்கை கொண்ட சோழபுரம், திருக்கோடிக்கா ஆகிய தலங்களின் கையில் வீணை இல்லாத கலைமகளை தரிசிக்கலாம். திருவையாறு அருகில் உள்ள திருப்பூந்துருத்தி புஷ்பவனேஸ்வரர் கோயிலில் கோஷ்ட தேவதையாக அருள்பாலிக்கிறாள். சரஸ்வதி தேவி, மேலிரு கரங்களில் அட்சர மாலை மற்றும் சுவடி, கீழ்க்கரங்களில் அபயம், ஊரு முத்திரையுடன் காட்சி தருகிறாள். அஜ்மீரிலுள்ள புஷ்கர் கோயில், தஞ்சை மாவட்டம் கண்டியூரில் உள்ள சிரகண் டீஸ்வரர் கோயிலில் வீணை இல்லாமல் பிரம்மனுடன் சேர்ந்து காட்சி தரும் சரஸ்வதி தேவியை தரிசிக்கலாம்.