அம்பு சுரத்தல்!
ADDED :2952 days ago
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் நவராத்திரி விழா மிகச் சிறப்பாக நடைபெறும். இவ்விழாவின் ஒரு பகுதியாக உச்சைசிரவஸ் (தேவலோகத்துக் குதிரை) எனும் குதிரை மீது அமர்ந்து பகவதி அம்மன் பாணாசுரனை அழிக்க போர்க்களம் செல்லும் வைபவத்தை அம்பு சுரத்தல் என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள். இந்த வைபவம் மகாதானபுரம் என்ற இடத்தில் விஜயதசமி அன்று நடைபெறுகிறது.