உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாராயணகுரு ஜெயந்தி ஊர்வலம்

நாராயணகுரு ஜெயந்தி ஊர்வலம்

ஸ்ரீவில்லிபுத்துார், நாராயணகுரு 163வது ஆண்டு ஜெயந்தி விழாவை முன்னிட்டு மூணாறு ராஜாக்காட்டில் ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது. ஊர்வலத்தை தமிழ்நாடு இல்லத்து பிள்ளைமார் சங்க மாநில தலைவர் வி.பி.எம்.சங்கர் மற்றும் பழனிசெல்வி சங்கர் துவக்கி வைத்தனர்.ராஜாக்காடு ஸ்ரீமகாதேவ ஆலயத்தில் ஜெயந்தி விழா பொதுக்கூட்டம் நடந்தது. சங்க நிர்வாகி குமார் தலைமை வகித்தார். லெத்தீஸ்குமார் முன்னிலை வகித்தார். எஸ்.என்.டி.பி. பொதுசெயலர் வெள்ளப்பள்ளி நடேசன், தமிழ்நாடு இல்லத்து பிள்ளைமார் சங்க மாநில செயலாளர் பாலசுப்பிரமணியம், சுஜிமோன், அஜயன் பேசினர்.சங்க மாநில தலைவர் வி.பி.எம்.சங்கர் பேசுகையில், நாராயணகுரு பாதையில் நாமும், ஒவ்வொரு மனிதரின் கல்வி வளர்ச்சிக்கும் பாடுபடவேண்டும், என்றார். தொழிலதிபர்கள் பரமானாந்தம், வி.பி.எம். முருகன் மற்றும் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !