அரங்க ராமானுஜர் பஜனை மடத்தில் உறியடி உற்சவம்
ADDED :2945 days ago
புதுச்சேரி: புதுச்சேரி செயின்ட் தெரேஸ் வீதியில் உள்ள அரங்க ராமானுஜர் பஜனை மடம், ஸ்ரீதேவி, பூதேவி சமேத அனந்த ரங்கநாதர் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி உறியடி உற்சவம் நேற்று நடந்தது. இதனையொட்டி, காலை 10:00 மணிக்கு சுவாமிக்கு திருமஞ்சனம், சேவாகால மகா திபாராதனை, பகல் 12:00 மணிக்கு ததியாராதனை நடந்தது. மாலை 5:00 மணிக்கு ராதா- கிருஷ்ணா பிருந்தாவன வைபவம் நடந்தது. இரவு 8.௦௦ மணிக்கு கோலாகல பஜனையுடன் உள்புறப்பாடு, உறியடி உற்சவம் நடந்தது. இதில், முதல்வர் நாராயணசாமி கலந்து கொண்டு உறியடி உற்சவத்தை துவக்கி வைத்தார். விழாவில், சிவா எம்.எல்.ஏ., இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் தில்லைவேல் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.