உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் ஜொலிக்கும் 18 படிகள்

ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் ஜொலிக்கும் 18 படிகள்

கீழக்கரை: ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் நாளை (செப்., 15) வெள்ளிக்கிழமை காலை 8:30 முதல் 10 மணிக்குள் சபரிமலை மகா கண்டரு ராஜூவரு தந்தரியால் கும்பாபிஷேகம் நடத்தி வைக்கப்பட உள்ளது. கோயில் பிரகாரத்தில் துளசிமாடம் நிறுவப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தது. மூலவர் சன்னதியில் 18 படிக்கட்டுகள் மற்றும் கோயில் மேற்கூரை முழுவதும் தங்கமூலாம் பூசப்பட்டு பொலிவுடன் காட்சி தருகிறது. முதல்கால பூஜை (செப்.11) முதல் துவங்கியது. ஏழு கால யாகசாலைகளில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். மாலையில் ஆன்மிக சொற்பொழிவுகள் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை தலைமை குருசாமி மோகன்சுவாமி, வல்லபை ஐயப்பா சேவை நிலைய அறக்கட்டளை உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !