உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி ஷீரடி சாய்பாபா கோவில்களில் பாலாபிஷேகம்

திருத்தணி ஷீரடி சாய்பாபா கோவில்களில் பாலாபிஷேகம்

திருத்தணி;திருத்தணி ஒன்றியம், கே.ஜி. கண்டிகை, சாய்பாபா நகரில் ஷீரடி சாய்பாபா
கோவிலில், நேற்று பாலாபிஷேக உற்சவ விழா நடந்தது.விழாவை ஒட்டி, காலை, 6:00
மணி முதல், நண்பகல், 11:00 மணி வரை, மூலவருக்கு பாலாபிஷேகம் நடந்தது. இதில்,
திரளான பக்தர்கள் சாய்பாபாவிற்கு பாலாபிஷேகம் செய்தனர்.

மதியம், 12:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை
நடந்தது. மாலை, 3:00 மணி முதல், மாலை, 6:00 மணி வரை, ஆர்.பி.என்., மற்றும் திருப்பதி
தேவஸ்தான குழு உறுப்பினர் கிருஷ்ணராவ் ஆகியோரின் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. மாலை, 6:10 விஷ்ணுசஹஸ்ரநாம பாராயணம், சந்திய ஆரதி மற்றும் சேஜ் ஆரத்தி நடந்தது.

அதே போல், தலையாறிதாங்கல் ஷீரடி சாய்பாபா கோவிலிலும் நேற்று மூலவருக்கு, 108
லிட்டர் பாலாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, வண்ணமலர்களால் அலங்காரம் மற்றும்
தீபாராதனை நடந்தது. மதியம், 12:00 மணிக்கு மதிய ஆரத்தியும், மாலை, 6:00 மணிக்கு
சேஜ் ஆரத்தியும் நடந்தது.இதே போல், நகரி பகுதியில் அமைந்துள்ள சாய் பாபா கோவிலிலும், சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !