உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாகர்கோவில், நவராத்திரி ஊர்வல பாதை மாற்ற பகர்தகள் எதிர்ப்பு 18-ல் ஊர்வலம் புறப்படுகிறது

நாகர்கோவில், நவராத்திரி ஊர்வல பாதை மாற்ற பகர்தகள் எதிர்ப்பு 18-ல் ஊர்வலம் புறப்படுகிறது

நாகர்கோவில்: பத்மனாபபுரத்தில் இருந்து திருவனந்தபுரத்துக்கு நவராத்திரி பவனி செல்லும் பாதையை மாற்ற பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து, வழக்கமான பாதையில் செல்ல கலெக்டர் உத்தரவிட்டார்.

திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகராக பத்மனாபபுரம் விளங்கியது. அப்போது இங்கு நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. கவிரயரசர் கம்பர் வழிப்பட்டதாக கருதப்படும் சரஸ்வதிதேவி சிலை அரண்மனை வளாகத்தில் உள்ள தேவாரகெட்டு கோயிலில் உள்ளது. பின்னர் நிர்வாக வசதிக்காக தலைநகர் திருவனந்தபுரத்துக்கு மாற்றப்பட்டதும், சரஸ்வதிதேவி சிலை பவனியாக திருவனந்தபுரம் எடுத்து செல்லப்பட்டு
அங்கு நவராத்திரி விழா நடைபெற்றது.

அந்த மரபின் படி, தற்போதும் தேவி விக்ரகம் யானை மீது பவனியாக திருவனந்தபும் கொண்டு செல்லப்பட்டு விழா நடைபெறுகிறது. இந்த ஆண்டு நவராத்திரி விழா வரும் 21-ம் தேதி தொடங்க உள்ள நிலையில் 18-ம் தேதி ஊர்வலம் புறப்படுகிறது. ஊர்வலம் செல்லும் மார்த்தாண்டத்தில் மேம்பாலம் பணி நடைபெற்று வருவதால் வாகனங்கள் செல்லும் மாற்றுப்பாதையில் ஊர்வலம் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஆனால் இந்துமுன்னணி உள்ளிட்ட அமைப்புகளும், பக்தர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து கலெக்டர் சஜ்ஜன்சிங்சவான் போலீஸ், தேவசம்போர்டு, நெடுஞ்சாலை த்துறை அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார். மன்னர் கால வழக்கப்படி பழைய பாதையில்தான் ஊர்வலம் செல்ல வேண்டும் என்றும், பாலவேலை நடைபெறும் மார்த்தாண்டத்தில் ஊர்வலம் கடந்து செல்ல தேவையான வசதியை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் செய்ய வேண்டும் என்றும் கலெக்டர் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !