பகவதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :2948 days ago
கிருஷ்ணராயபுரம்: லாலாப்பேட்டை அடுத்த, பாலப்பட்டியில், விநாயகர் மற்றும் பகவதி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. கிருஷ்ணராயபுரம் அடுத்த சிந்தலவாடி பஞ்., பாலப்பட்டியில், செல்வ விநாயகர், பகவதி அம்மன், காளி அம்மன் கோவிலில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கும்பாபி?ஷகம் நடந்தது. முன்னதாக கடந்த, 14ல், லாலாப்பேட்டையில் இருந்து காவிரி தீர்த்த குடம் எடுத்து வரப்பட்டு, கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. நேற்று அதிகாலை இரண்டாம் கால யாக பூஜை நடந்தது. காலை, 9:00 மணிக்கு, பகவதி அம்மன் மற்றும் விநாயகர் கோவில் கோபுர கலசங்களுக்கு, ரத்தினகிரீஸ்வரர் கோவில் குருக்கள், கணேசரத்தின குருக்கள் தலைமையில், புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. இதில், பாலப்பட்டி சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.