உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேவிபட்டினம் நவபாஷாணத்தில் உண்டியல் திறப்பு

தேவிபட்டினம் நவபாஷாணத்தில் உண்டியல் திறப்பு

தேவிபட்டினம்: தேவிபட்டினம் நவபாஷாணத்தில் முன்னோர்களுக்கு தர்பணம், மற்றும் பல்வேறு தோஷ நிவர்த்தி வேண்டி தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த கோயிலில் உள்ள உண்டியல்கள் கோயில் செயல் அலுவலர் இளங்கோ தலைமையில் திறக்கப்பட்டு உண்டியல் எண்ணப்பட்டது. இதில் ஒரு லட்சத்து இரண்டு ஆயிரத்து 256 ரூபாய் இருந்தன. உண்டியல் எண்ணும் பணியில் ஆய்வாளர் கர்ணன், எழுத்தர் தங்கவேல் பாண்டியன் உட்பட கோயில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !