சக்தி அம்மன் கோயிலில் காவடி எடுத்து நேர்த்தி கடன்
ADDED :2949 days ago
கமுதி: கமுதியில் மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி சக்தி அம்மன் கோவில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.கமுதி எட்டுக்கண் பாலம் அருகே சக்தி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் பக்தர்கள் சார்பில் கமுதி பகுதியில் வறட்சி போக்கி, மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி கமுதி மீனாட்சி அம்மன் கோவில், சாயல்குடி ரோடு, பஸ் ஸ்டாண்ட், மதுரை, அருப்புக்கோட்டை ரோடு உட்பட கமுதியின் முக்கிய வீதிகள் வழியாக பக்தர்கள் பறவை காவடி, அலகு மயில் காவடி, வேல் குத்துதல், அக்கினி சட்டி, பால்குடம், கஞ்சி கலையம், முளைப்பாரிகளுடன் பக்தர்கள் ஊர்வலமாக சென்று கமுதி சக்தி அம்மன் கோவிலுக்கு சென்று தங்களது நேர்த்தி கடன்களை நிறைவேற்றி சிறப்பு வழிபாடு நடத்தினர். இந்நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.