திருவண்ணாமலை கார்த்திகை தீப விழாவில் இன்று ரிஷப வாகனத்தில் ஸ்வாமி உலா!
ADDED :5242 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை ஐந்தாம் நாள் விழாவான இன்று இரவு பெரிய ரிஷப வாகனத்தில் ஸ்வாமி வீதி உலா நடக்கிறது.இன்று காலை விநாயகர் மூஷிக வாகனத்திலும், ஸ்ரீசந்திரசேகரர் கண்ணாடி ரிஷப வாகனத்திலும் வீதி உலா வருவர். இரவு 10 மணிக்கு மேல் விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்திலும், வள்ளி, தெய்வாணை சமேதர் சுப்பிரமணியர் வெள்ளி மயில் வாகனத்திலும், உண்ணாமுலையம்மன் சமேதரராய் அருணாசலேஸ்வரர் வெள்ளி பெரிய ரிஷப வாகனத்திலும், பராசக்தி அம்மன் வெள்ளி சின்ன ரிஷப வாகனத்திலும், சண்டிகேஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனத்திலும் வீதி உலா வருவர்.இதையொட்டி இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடக்கிறது.