கோமாதா ஆலயத்தில் தர்ப்பணம் நிகழ்ச்சி
ADDED :2955 days ago
புதுச்சேரி: மகாளயபட்ச அமாவாசையை முன்னிட்டு, கருவடிக்குப்பம் கோமாதா ஆலயத்தில், முன்னோர்களுக்கான தர்ப்பணம் நிகழ்ச்சி இன்று நடக்கிறது. அமாவாசை வரையிலான 15 நாட்கள் மகாளய பட்சம் எனப்படுகிறது. இந்த நாட்களில் முன்னோர் கள், பூமிக்கு வந்து, நமது பிரார்த்தனைகளை ஏற்றுக் கொள்வர் என்பது ஐதீகம். மகாளய அமாவாசை தினத்தில், புண்ணிய தலங்கள் மற்றும் கடல், ஆறு, குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபடுவது விசேஷம். கருவடிக்குப்பம் கோமாதா ஆலயத்தில் இன்று தர்ப்பணம், பிண்டதானம், கோ பூஜை செய்து வழிபாடு நிகழ்ச்சி நடக்கிறது.