உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / லிங்க பைரவி தேவி கோபியில் பிரதிஷ்டை

லிங்க பைரவி தேவி கோபியில் பிரதிஷ்டை

ஈரோடு: கோபியில், அக்கரைக்கொடிவேரி பிரிவு அருகில், லிங்கபைரவி தேவி பிரதிஷ்டை, நாளை நடக்கிறது. காலை, 6:00 மணிக்கு நிகழ்ச்சி தொடங்குகிறது. இதில் கலந்து கொள்ள, அனுமதி இலவசம். தினமும் காலை, 6:30 முதல், மதியம், 1:20 மணி வரை, மாலை, 4:20 முதல், 8:20 மணி வரை, பக்தர்கள் தேவியை தரிசிக்கலாம். நவராத்திரியை முன்னிட்டு, 21முதல், 29 வரை, தினமும் மாலையில் லிங்கபைரவி தேவிக்கு, சிறப்பு நவராத்திரி அற்பனை நிகழும். செப்.,30ல் விஜயதசமியை முன்னிட்டு, குழந்தைகளுக்கு வித்யாரம்பம் நிகழும். அமாவாசை, பவுர்ணமி நாட்களில், 11 அர்ப்பணிப்புகளாலான அபிஷேகம் நடக்கும். பிரதிஷ்டைக்கு பின், 48 நாட்களுக்கு, நாள்தோறும், மாலை, 6:15 முதல், 7:00 மணி வரை தேவி சாதனா நடக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !