நெரூர் காவிரியில் இன்று மஹா புஷ்கரம் விழா
ADDED :3042 days ago
கரூர்: நெரூர், காவிரி ஆற்றில் புஷ்கரம் விழா இன்று நடக்கிறது. துலாம் ராசிக்கு உரிய, காவிரியில் புஷ்கர விழா இன்று கொண்டாடப்படுகிறது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் புஷ்கர விழா, இந்தாண்டு, 12வது முறையாக காவிரியில் நடப்பதாக சொல்லப்படுகிறது. 144 ஆண்டுகள் ஆனதால் இதை ’மஹாபுஷ்கரம்’ என்ற பெயரில் கொண்டாடுகின்றனர். காவிரி மஹா புஷ்கர மகோத்ஸவம் கடந்த, 12 முதல், 24 வரை கொண்டாடப்பட்டு வருகிறது. இதில், கரூர் அடுத்த நெரூர் காவிரியில் இன்று காலை, 8:30 மணி முதல், 10:30 மணி வரை புஷ்கரம் விழா நடக்கிறது. இங்கு, கோவில் உற்சவமூர்த்திகளின் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. மேலும், துறவியர், பக்தர்கள், பொதுமக்கள் புனித நீராடுவர்.