சேதுக்கரையில் குவிந்த பக்தர்கள்
ADDED :2960 days ago
கீழக்கரை: சேதுக்கரை கடற்கரையில் மகாளய அமாவாசையை முன்னிட்டு அதிகாலை 3:00 மணி இருந்து பக்தர்கள் புனித நீராட குவிந்தனர். முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதி, சிரார்த்தம் உள்ளிட்ட சங்கல்ப பூஜைகளை கடற்கரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் செய்தனர். வெளிமாவட்டத்திலிருந்தும், ராமநாதபுரம் மாவட்ட சுற்றுவட்டாரப்பகுதிகளில் இருந்து குடும்பத்துடன் பங்கேற்று பித்ரு கடன் பூஜைகளை செய்து வழிபாடு செய்தனர். சேதுபந்தன ஜெயவீர ஆஞ்சனேயர் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சேதுக்கரை செல்லும் வழியில் உள்ள அகத்தியர், வெள்ளை பிள்ளையார் கோயிலின் முன்பு சிதறு தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றிக்கொண்டனர்.