உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நான்கு வகை நவராத்திரி

நான்கு வகை நவராத்திரி

ஆடி மாத அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல் ஒன்பது நாட்கள் - வராஹி நவராத்திரி
புரட்டாசி மாத அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல் நவமி வரை ஒன்பது நாட்கள் - சாரதா நவராத்திரி
தை மாத அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி - சியாமளா நவராத்திரி
பங்குனி மாத அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல் ஒன்பது நாட்கள் - வசந்த நவராத்திரி
இந்தியாவில், புரட்டாசி மாத மகாளய அமாவாசைக்கு பின் வரும், பிரதமை நாள் முதல் ஆரம்பிக்கும் சாரதா நவராத்திரி பெரும்பாலானோரால் கொண்டாடப்படுகிறது. புரட்டாசி மாதம் பிறந்தால், புது வாழ்வு அமையும் என்பது புதுமொழி.

அரிசி மாவு கோலம்:
சுண்ணாம்பு மாவு பயன்படுத்தாமல், அரிசி மாவு மற்றும் செம்மண் கோலமிட்டால், குடும்ப ஒற்றுமையும், செல்வமும் வளரும். நவக்கிரக கோலம் போட்டால், அம்பாள் அனுக்கிரகமும், நவக்கிரகப் பலன்களும் கிடைக்கும்.இரவு, 7:00 மணி முதல், 9:30 மணி வரை தேவி வழிபாடு செய்ய உகந்த நேரமாகும்.பூஜையில் கலந்து கொள்ளும் கன்னிப் பெண்களுக்கு புதிய ஆடை, பல விதமான மங்கலப் பொருட்கள், மஞ்சள், குங்குமம், வளையல், ரிப்பன், பொட்டு என, அளிப்பது நன்மை தரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !