சதுரகிரி கோயிலுக்கு செல்ல அனுமதி மறுப்பு
ADDED :2959 days ago
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு வனத்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். சுந்தரமகாலிங்கம் கோயிலில் நடைபெறும் நவராத்திரி விழாவை காண சென்ற பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் 30 க்கும் மேற்பட்ட பக்தர்கள், மலை அடிவாரத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.