லிங்கபைரவி தேவி கோவிலில் பிரதிஷ்டை விழா கோலாகலம்
கோபிசெட்டிபாளையம்: கோபி அருகே, லிங்கபைரவி தேவி கோவில் பிரதிஷ்டை விழா, நேற்று கோலாகலமாக நடந்தது. ஈரோடு மாவட்டம், கோபி அருகே அக்கரை கொடிவேரியில், லிங்கபைரவி கோவில் நிறுவப்பட்டுள்ளது. இங்கு, லிங்கபைரவி தேவி நேற்று காலை, 6:00 மணிக்கு பிரதிஷ்டை செய்யப்பட்டது. 6:30 மணி முதல் சிறப்பு பூஜைகள் நடந்தன. ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த, ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். தினமும் காலை, 6:30 முதல் மதியம், 1:20 மணி வரை, மாலை, 4:20 முதல், 8:20 மணி வரை, பக்தர்கள் தேவியை தரிசிக்கலாம். நவராத்திரியை முன்னிட்டு, செப்.,29 வரை, தினமும் மாலையில் லிங்க பைரவி தேவிக்கு, சிறப்பு பூஜை நடக்கிறது. செப்.,30ல் விஜயதசமியை முன்னிட்டு, குழந்தைகளுக்கு வித்யாரம்பம் நடக்கிறது. அமாவாசை, பவுர்ணமி நாட்களில் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. 48 நாட்களுக்கு தினமும் மாலை, 6:15 முதல், 7:00 மணி வரை தேவி சாதனா நடக்கிறது.