கோவை சாரதாலயத்தில் நவராத்திரி விழா
ADDED :2943 days ago
கோவை: அம்பாளுக்கு உகந்த நவராத்திரி பண்டிகையில், ஒன்பது நாட்களும், அம்மனுக்கு சிறப்பு அலங்கார அபிஷேக பூஜைகள் செய்து வழிபடுவது வழக்கம். ரேஸ்கோர்ஸ் சாராதாம்பாள் கோவிலில் நவராத்திரி விழா, நேற்று முன்தினம் காலை 9:00 மணிக்கு மகா அபிசேகத்துடன் துவங்கியது. வரும் 30ம் தேதி வரை, நடக்கும் வழிபாட்டில் ப்ராம்ஹி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி உள்ளிட்ட அலங்காரங்களில், ஒவ்வொரு நாளும் அம்மன் அருள்பாலிக்கிறார். விழாவில், வாய்ப்பாட்டு, இசை, நடனம், புராணக்கதை சொற்பொழிவு உள்ளிட்ட கலைகளை வளர்க்கும் சிறப்பு நிகழ்ச்சிகள் மாலையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. முதல் நாளில் வடசித்துார் சகோதரிகளின் வாய்ப்பாட்டு நிகழ்ச்சி நடந்தது.