மாரியூர் பூவேந்தியநாதர் கோயிலில் நவராத்திரி விழா
ADDED :2943 days ago
சாயல்குடி, சாயல்குடி அருகே மாரியூர் பவளநிறவல்லியம்மன் சமேத பூவேந்தியநாதர் கோயிலில் நவராத்திரி விழா துவங்கியது. மூலவர்களுக்கு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு, சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். கோயில் பிரகார வளாகத்தில் கொலு பொம்மைகள் அடுக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டது. நேற்று ராஜராஜேஸ்வரி அலங்காரமும், இன்று தனலெட்சுமி, தொடர்ந்து அன்னலெட்சுமி, தான்ய லெட்சுமி, சிவபார்வதி, சந்தான லெட்சுமி, மகிஷாசுரவர்த்தினி, ஒன்பதாம் நாள் சரஸ்வதி அலங்காரத்திலும், 10ம் நாள் விஜயதசமி அன்று சர்வ அலங்காரத்திலும் காட்சி நடக்க உள்ளது. நிறைவுநாளன்று அசுர சம்ஹாரமும், மாலையில் 1008 விளக்குபூஜையும் நடக்க உள்ளது. ஏற்பாடுகளை சேகர் குருக்கள், சந்தோஷ் குருக்கள் மற்றும் மகாசபை பிரதோஷ அன்னதான கமிட்டியாளர்கள் செய்து வருகின்றனர்.