அன்னமலை முருகன் கோவிலில் கிருத்திகை பூஜை
ADDED :2942 days ago
மஞ்சூர் : மஞ்சூர் அன்னமலை முருகன் கோவிலில் நடந்த கிருத்திகை பூஜையில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். மஞ்சூர் அடுத்துள்ள அன்னமலை முருகன் கோவிலில் தினமும் காலை, மாலை நேரங்களில் தினசரி பூஜைகள் நடந்து வருகிறது. கோவிலில் நடந்த கிருத்திகை பூஜையையொட்டி காலை, 6:30 மணிக்கு கணபதி பூஜை நடந்தது. காலை, 11:00 மணிக்கு கோவில் ஸ்தாபகர் குரு கிருஷ்ணாநந்தாஜி தலைமையில், முருக பெருமானுக்கு பால், தயிர், பன்னீர் உள்பட, 12 அபிேஷகங்கள் செய்யப்பட்டது. பூஜையை யொட்டி சிறப்பு பூஜையில், திரளான பக்தர்கள் பங்கேற்று சிறப்பினத்தனர். அன்னதான நிகழ்ச்சி நடந்தது. பூஜை ஏற்பாடுகளை கோவில் ஸ்தாபர்கள் குரு கிருஷ்ணாநந்தாஜி செய்திருந்தார்.