உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோட்டை கோவில் சீரமைப்பு பணி இன்று துவக்கம்

கோட்டை கோவில் சீரமைப்பு பணி இன்று துவக்கம்

சேலம்: கோட்டை மாரியம்மன் கோவில் சீரமைப்பு பணி, இன்று தொடங்குகிறது. சேலம், கோட்டை மாரியம்மன் கோவிலில் சீரமைப்பு பணிக்கு, அரசு, 2.80 கோடி ரூபாய் ஒதுக்கி உத்தரவிட்டது. இதையடுத்து, அப்பணி தொடங்கி நடந்தது. ஆனால், வழக்கு, கருவறை இடிக்க எதிர்ப்பு உள்ளிட்ட பிரச்னைகளால், பணி நிறுத்தப்பட்டது. இதையடுத்து, ஏப்ரலில் தொடங்கிய பணி, ஆடிப்பண்டிகையால் நிறுத்தப்பட்டது. செயல் அலுவலர் மாலா கூறுகையில், ஆடிப்பண்டிகையை மக்கள் கொண்டாட வசதியாக, கட்டுமானப் பணி நிறுத்தப்பட்டது. தற்போது, மீண்டும் கட்டுமானப் பணி தொடங்க முயற்சித்தோம். உயர் அதிகாரிகள் அனுமதி அளித்ததால், நாளை(இன்று) பணி தொடங்குகிறது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !