மாரியம்மன் கோவிலில் வரும் 30ல் சண்டி ஹோமம்
ADDED :2942 days ago
சேலம்: மாரியம்மன் கோவிலில், வரும், 30ல் சண்டி ஹோம விழா நடக்கிறது. சேலம், செங்குந்தர் மாரியம்மன் கோவிலில், நவராத்திரி விழா, நேற்று தொடங்கியது. அதையொட்டி, தினமும் சிறப்பு பூஜை நடக்கிறது. வரும், 29 மாலை, 6:30 மணிக்குமேல், அம்மனுக்கு சிறப்பு பூஜை, 30 காலை, 6:00 மணிக்கு அதிகாலை பூஜை, திருமணமாகாத இளம்பெண்களின் பாத பூஜை நடக்கிறது. மதியம், 12:00 மணிக்கு மேல், உலக நன்மைக்காக, சண்டி ஹோமம், காளியம்மனுக்கு தங்க கவச சாத்துபடி செய்யப்படும். அதேபோல், கோட்டை மாரியம்மன், கன்னிகா பரமேஸ்வரி, குகை மாரியம்மன் - காளியம்மன் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு பூஜை நடக்கிறது.