செங்குடி துாய மிக்கேல் அதிதுாதர் ஆலய விழா கொடியேற்றம்
ADDED :3066 days ago
ஆர்.எஸ்.மங்கலம், ஆர்.எஸ்.மங்கலம் அருகே செங்குடி துாய மிக்கேல் அதிதுாதர் ஆலய விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. பங்கு பாதிரியார் ஜெகநாதன், வட்டார அதிபர் கிளமண்ட் ராஜ் முன்னிலையில் கொடி ஊர்வலம் நடைபெற்றது. கொல்கத்தா சேவியர் கல்லுாரி துணை வேந்தர் பாதிரியார் பெலிக்ஸ் ராஜ் கொடியேற்றி விழாவை துவக்கி வைத்தார். தினமும் மாலை நவநாள் திருப்பலி, நற்கருணை ஆராதனை நடைபெறுகிறது.செப். 28 ல் தேர்பவனி விழா நடைபெற்று கொடி இறக்கத்துடன் விழா விழா நிறைவடைகிறது.