தீப தரிசனம்: சிவனடியார்கள் நடைபயணம்
ADDED :5238 days ago
நெல்லிக்குப்பம்:நெல்லிக்குப்பத்திலிருந்து திருவண்ணாமலைக்கு சிவனடியார்கள் நடைபயணம் துவக்கினர்.நெல்லிக்குப்பத்திலிருந்து திருவண்ணாமலைக்கு 6ம் ஆண்டாக சிவனடியார்கள் கார்த்திகை தீபம் காண நடைபயணம் மேற்கொண்டனர். திருமாணிக்குழி மலையில் உள்ள ஆதிபுரீஸ்வரர் கோவில் நிர்வாகி ரமேஷ் சுவாமிகள் தலைமையில் 10 பெண்கள் உட்பட 20க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் நடைபயணம் துவக்கினர்.வரசித்தி விநாயகர் கோவிலில் துவங்கிய நடைபயணத்தை இன்ஜினியர் ராஜேந்திரன் துவக்கி வைத்தார். அம்சா பாஸ்கர், சந்திரசேகரன், கனகராஜ் உட்பட பலர் பங்கேற்றனர். திருக்கண்டேஸ்வரம் நடனபாதேஸ்வரர், திருவதிகை வீரட்டானேஸ்வரர், திருவாமூர், சித்தலிங்கமடம் உட்பட பல ஊர்களில் சிவன் கோவில்களில் வழிபாடு நடத்தி வரும் எட்டாம் தேதி திருவண்ணாமலையில் மகா தீபத்தை தரிசனம் செய்கின்றனர்.