ராஜராஜேஸ்வரி அம்மன் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா
ADDED :2937 days ago
திண்டிவனம்: திண்டிவனம் ராஜராஜேஸ்வரி அம்மன் கோவிலில், 22 ம் ஆண்டு நவராத்திரி பிரமோற்சவ விழா துவங்கியது. முதல் நாள் விழாவையொட்டி, மாலை 5:00 மணிக்கு அம்மனுக்கு மகா அபிஷேகமும், 6:00 மணிக்கு திருவிளக்கு பூஜையும், ஊஞ்சல் உற்சவமும் நடந்தது. தொடர்ந்து, சகஸ்ரநாம அர்ச்சனையும், மகா தீபாராதனையும் நடந்தது. நிகழ்ச்சிக்கு சாணக்யா கல்விக்குழுமத் துணைத்தலைவர் வேல்முருகன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில், வழக்கறிஞர்கள் கணேஷ் காந்தி, தீனதயாளன், பாலசுப்ரமணியம் மற்றும் கலிவரத ரெட்டியார், அன்னை சந்தானம், கோவில் நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவையொட்டி, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.