மதுரை நன்மைதருவார் கோயிலில் நவராத்திரி விழா கோலாகலம்
ADDED :2936 days ago
மதுரை: சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்குட்பட்ட, மதுரை மேலமாசி வீதி அருள்மிகு இம்மையிலும் நன்மைதருவார் திருக்கோயிலில் நவராத்திரி திருவிழா 21.9.2017 வியாழக்கிழமை முதல் 30.9.2017 சனிக்கிழமை வரை திருக்கோயிலில் நவராத்திரி கொலு அலங்காரம். கல்ப பூஜை, சகஸ்ர நாம அர்ச்சனை, சோடச உபச்சாரம், தீபாராதனை மிக விமரிசையாக நடைபெறுகிறது.
நவராத்திரி வைபவம் அலங்காரம்
21.09.2017-ஸ்ரீராஜராஜேஸ்வரி
22.09.2017-அன்னபூரணி
23.09.2017-வளையல் விற்ற லீலை
24.09.2017-சிவதாண்டவம்
25.09.2017-தேவி மஹாலட்சுமி
26.09.2017-ஸ்ரீகருமாரியம்மன்
27.09.2017-கோலாட்டம்
28.09.2017- மஹிஷாசுர மர்த்தினி
29.09.2017-சிவ பூஜை அலங்காரம் (சரஸ்வதி பூஜை)
30.09.2017-விஜயதசமி (அம்பு போடுதல்)