உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவி.வடபத்ரசயனர் கோயிலில் புரட்டாசி பிரம்மோத்ஸவம் கொடியேற்றத்துடன் துவக்கம்

ஸ்ரீவி.வடபத்ரசயனர் கோயிலில் புரட்டாசி பிரம்மோத்ஸவம் கொடியேற்றத்துடன் துவக்கம்

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசயனர் கோயிலில் புரட்டாசி பிரம்மோத்ஸவ திருவிழா கொடியேற்றுத்துடன் துவங்கியது. காலை 8 மணியளவில் கொடிபட்டம் மாடவீதிகள் வழியாக சுற்றி கொண்டு வரபட்டு, பெரியபெருமாள், ஸ்ரீதேவி, பூமாதேவிக்கு சிறப்பு பூஜைகள் நடந்து, பாலாஜி பட்டர் கொடிபட்டம் ஏற்றினார். நிகழ்ச்சயில் தக்கார் ரவிசந்திரன், செயல்அலுவலர் ராமராஜா, வேதபிரான் அனந்தராமபட்டர், சுதர்சன். ஸ்தானிகம் கிருஷ்ணன், ரமேஷ் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.  இதனை தொடர்ந்து தினமும்  நாலாயிர திவ்யபிரபந்த சேவாகாலமும், காலையில் சுவாமி மண்டபம் எழுந்தருளல், இரவு வீதியுலாவும் நடக்கிறது.  செப்.27 புதன் இரவு பெரியபெருமாள் தங்ககருடசேவையும், செப்.29 வெள்ளி அன்று சயனசேவையும், அக்.ஒன்றாம் தேதி காலை செப்புத்தேரோட்டமும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !