திருத்தணி முருகன் கோவிலில் நவராத்திரி விழா
ADDED :3269 days ago
திருத்தணி : முருகன் மலைக்கோவிலில் நவராத்திரி விழா துவங்கியது. திருத்தணி முருகன் மலைக்கோவிலில் நவராத்திரி விழா நேற்று முன்தினம் இரவு துவங்கியது. முன்னதாக, கோவில் வளாகத்தில் யாகசாலை பூஜை நடந்தது. தொடர்ந்து, உற்சவர் கஜலட்சுமி அம்மையார் சிறப்பு அலங்காரத்தில், அன்ன வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையொட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. நவராத்திரி விழாவை கோவில் தக்கார் ஜெய்சங்கர் துவக்கி வைத்தார். இந்த விழா, வரும், 30ம் தேதி வரை நடை பெறுகிறது. தினமும், மாலை, 6:30 மணிக்கு உற்சவர் கஜலட்சுமி அம்மன் அன்னவாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். பின்னர், சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெறும்.