தொடரட்டும் நல்ல பழக்கம்!
ADDED :2966 days ago
மாணவர்களுக்கு வாரியார் சொல்லும் அறிவுரை: கற்க கசடறக் கற்றவை கற்றபின் நிற்க அதற்குத் தகஎன்கிறது திருக்குறள். படித்த நல்ல விஷயங்களை வாழ்வில் கடைபிடிக்க வேண்டும் என்கிறார் திருவள்ளுவர். படித்தால் என்ன லாபம்? சென்ற இடமெல்லாம் சிறப்பு உண்டாகும். எல்லா நாடும் கற்றவருக்குச் சொந்தம். பணம் தேடுவதோடு நல்லறிவை தேடவும் மாணவர்கள் கல்வி கற்க வேண்டும். ராமாயணம், மகாபாரதம், திருக்குறள் போன்ற நல்ல நூல்களைத் தேடிச் சென்று படிக்க வேண்டும். மாணவர்களுக்கு படிப்புடன், தெய்வ பக்தி அவசியம். அதிகாலையில் எழுந்து பல் துலக்கி, நீராடி நெற்றியில் திருநீறு பூசி, இறைவனின் திருநாமத்தைச் சொன்ன பின்னர் தான் நீராகாரம் பருக வேண்டும். இந்த நல்ல பழக்கத்தை உடனே கடைபிடிக்க முயல்வோம்.