தீர்த்தீஸ்வரர் கோவிலில் நாளை பவித்ர உற்சவம்
ADDED :2988 days ago
திருவள்ளூர்:திருவள்ளூர், தீர்த்தீஸ்வரர் கோவிலில், நாளை பவித்ர உற்சவம் துவங்குகிறது. திருவள்ளூர், பஜார் தெருவில் உள்ள திரிபுர சுந்தரி அம்பாள் உடனுறை தீர்த்தீஸ்வரர் கோவிலில், பவித்திர உற்சவம், ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. தினமும் நடைபெறும் பூஜைகளில், ஏதேனும் குறைகள் இருந்தால், அதை நிவர்த்தி செய்வதற்காக பவித்ர உற்சவம் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான பவித்ர உற்சவம், நாளை காலை, 8:00 மணிக்கு, யாகத்துடன் துவங்குகிறது. வரும், 5ம் தேதி, இரவு, 9:00 மணிக்கு, மகா பூர்ணாஹூதியுடன் உற்சவம் நிறைவடைகிறது. தினமும், காலை, 8:00 மணிக்கு, யாகம் துவங்கும். இரவு, 8:00 மணிக்கு பூர்ணாஹூதி நடைபெறும. வரும், 4ம் தேதி, மாலை, 6:00 மணிக்கு, நடராஜர் அபிஷேகம் நடைபெறும்.