அமாவாசை அம்பிகை
ADDED :2928 days ago
நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கடையூர் அபிராமி கோயில் அர்ச்சகர் சுப்பிரமணியம். அவர் அபிராமி மீது கொண்ட பக்தியை ஊரார் கேலி செய்தனர். ஒரு தை அமாவாசை அன்று சரபோஜி மன்னர் கோயிலுக்கு வந்தார். இன்று என்ன திதி?” என்று கேட்க, அம்பாளின் அழகில் தன்னை மறந்த அர்ச்சகர் பவுர்ணமி’ என்றார். தவறான பதில் சொல்லி தன்னை அலட்சியப்படுத்தியதாக கருதிய மன்னர், இன்று இரவு நிலா வராவிட்டால் மரண தண்டனை விதிக்கப்படும்’ என ஆணையிட்டார். உடனே அபிராமி அந்தாதி பாடலை, அர்ச்சகர் பாடினார். விழிக்கே அருளுண்டு...’ என்ற பாடலைப் பாடிய போது, அம்பிகை தன் தாடங்கத்தை(தோடு) வானில் வீச, நிலவு பிரகாசித்தது. அதைக் கண்டு அனைவரும் அதிசயித்தனர். அர்ச்சகர் அபிராமிபட்டர்’ என போற்றப்பட்டார்.