உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்

பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்

பழநி : பழநி பெரியநாயகியம்மன் கோயிலில், புரட்டாசி மாத வளர்பிறை சதுர்தசியை முன்னிட்டு நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் வருடத்திற்கு நடராஜருக்கு வருடத்திற்கு ஆறு முறை அபிஷேகம் நடைபெறும். இதில் நேற்று புரட்டாசி மாத வளர்பிறை சதுர்தசி திதியில்,  நடராஜருக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !