கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில் தெற்போற்சவம்
ADDED :3040 days ago
ஈரோடு: கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவில், தெற்போற்சவ திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவில் தேர்த்திருவிழா, கடந்த மாதம், 24ல் தொடங்கியது. அக்.,1ல் தேரோட்டம் நடந்தது. இதைத்தொடர்நது, நேற்று முன்தினம் இரவு, பட்டங்கி அலங்காரத்தில், சேஷ வாகனத்தில் பெருமாள் பவனி வந்தார். அதன் பின், கோவில் பரமபத வாசல் அருகே அமைக்கப்பட்டுள்ள தெப்பக்குளத்தில். தெற்போற்சவம் நிகழ்ச்சி நடந்தது. வரதராஜ பெருமாள் ஸ்வாமி தெப்பத்தில் மிதந்தபடி, பக்தர்களுக்கு சேவை சாதித்தார். தாமரை, ரோஜா, உள்ளிட்ட பல்வேறு மலர்களை குளத்தில் இறைத்து பக்தர்ள் வழிபட்டனர். நேற்று மஞ்சள் நீராட்டு விழா, மாலையில் ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாற்றுபடி நிகழ்ச்சி நடந்தது.