உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை தீபத்திருவிழா: மஹா தீபத்துக்கு 1,000 மீட்டர் திரி!

திருவண்ணாமலை தீபத்திருவிழா: மஹா தீபத்துக்கு 1,000 மீட்டர் திரி!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப விழா நாளை நடக்கிறது. இதில், 2, 668 உயரம் உள்ள அண்ணாமலையார் மலை மீது ஏற்றப்படும் மஹா தீபத்துக்கு , 1,000 மீட்டர் கடா துணி திரியாக பயன்படுத்த யானையுடன் பக்தர்கள் வீதியுலா வந்து கோயிலில் ஒப்படைத்தனர். தீபத்திருவிழாவிற்கு செல்லும் பக்தர்கள் வசதிக்காக, 800 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், கார்த்திகை தீபத்திருவிழா நாளை (8ம் தேதி) நடக்கிறது. இவ்விழாவில் பங்கேற்கும் பக்தர்கள் வசதிக்காக, விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகம் சிறப்பு பஸ்களை இயக்கவுள்ளது. சென்னை கோயம்பேட்டிலிருந்து, 800 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இது குறித்து பேசிய அதிகாரி ஒருவர், தீபத்திருவிழாவையொட்டி இயக்கப்படும் இந்த பஸ்களுக்கு முன்பதிவு கிடையாது. சென்னை மற்றும் புதுச்சேரியில் டோக்கன் கொடுக்கப்பட்டு, அதன் அடிப்படையில், பயணிகள் பஸ்களில் ஏற்றப்படுவார்கள். டோக்கன் கட்டணமாக, ஐந்து ரூபாய் செலுத்த வேண்டும். திருவண்ணாமலையில் இந்த டோக்கன் வழங்கப்பட மாட்டாது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !