உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சின்ன திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா

சின்ன திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா

சின்னதிருப்பதி: சேலம், சின்னதிருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில், ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் தேர்த்திருவிழா எனப்படும் பிரம்மோற்சவம் நடத்தப்படுகிறது. இந்தாண்டு பிரம்மோற்சவ விழா, நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது. நாளை திருக்கல்யாண உற்சவம், நாளை மறுநாள் கருடசேவை, முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வரும், 14ல் நடக்கிறது. இதையொட்டி, தினமும் வெங்கடேச பெருமாள் விதவிதமான வாகனங்களில் எழுந்தருளி, கோவிலில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இரண்டாம் நாளான நேற்று, பெருமாள் சர்வ அலங்காரத்தில், அனுமந்த வாகனத்தில் எழுந்தருளி கோவிலை வலம் வந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !