ஹரித்ரா ஹரி சகஸ்ரநாம அறக்கட்டளை ஆண்டு விழா
ADDED :2968 days ago
கடலுார்: கடலுாரில் ஹரித்ரா ஹரி சகஸ்ரநாம அறக்கட்டளை ஆண்டு விழா கடலுாரில் நடந்தது. கந்தசாமி நாயுடு மகளிர் கல்லுாரி முன்னாள் முதல்வர் கஸ்துாரிபாய் பாஸ்கரன் குத்துவிளக்கேற்றி விழாவைத் துவக்கி வைத்தார். அறக்கட்டளைத் தலைவர் முத்துவரதன் வரவேற்றார். முத்துக்குமரனார் சிறப்புரையாற்றினர். ‘ஆதிசங்கரரும், ராமானுஜரும்’ என்ற தலைப்பில் சாமிநாதன் சொற்பொழிவாற்றினார். தொடர்ந்து, விஷ்ணு சகஸ்ரநாம கூட்டு பாராயணம் நடந்தது. நிகழ்ச்சிக்கு முன் கடலுார் அரசு தலைமை மருத்துவமனையுடன் இணைந்து அனைவருக்கும் நிலவேம்பு கஷாயத்தை டாக்டர் செந்தில்குமார் வழங்கினார். உறுப்பினர் பாஸ்கரன் நன்றி கூறினார்.