ஆனந்தமலை முருகன் கோவிலில் கிருத்திகை பூஜை
ADDED :3285 days ago
ஊட்டி : ஊட்டி அருகே எம்.பாலாடா கீழ் அப்புக்கோடு ஸ்ரீ ஆனந்தமலை முருகன் கோவிலில் மாதாந்திர கிருத்திகை பூஜை நடந்தது. சித்தி செல்வவிநாயகர், ஆனந்தமலை முருகன், நவகிரகங்கள், ஏழு ெஹத்தையம்மன்களுக்கு அபிேஷகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து, பஜனை, ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் ராமச்சந்திரன் செய்திருந்தார்.