கோத்தகிரி கிருஷ்ணர் கோவிலில் உரியடி விழா
ADDED :2971 days ago
கோத்தகிரி : கோத்தகிரி கடைவீதி கிருஷ்ணர் திருக்கோவிலில், உரியடி திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதிகாலை முதல், கிருஷ்ணருக்கு சிறப்பு அலங்கார அபிேஷக பூஜை நடந்தது. தொடர்ந்து, பஜனை, ஆன்மிக சொற்பொழிவு, பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சிகள் நடந்தன. இதனை தொடர்ந்து, கிருஷ்ணர் வாழ்க்கையின் சாரம் பரிபூரணம் என்னும் வெண்ணையை எவ்வளவு தடைகள் மற்றும் சிரமங்களுக்கு இடையே, முயற்சி செய்து அடைந்ததை, பக்தர்கள் நாடகம் வாயிலாக, நடத்தி காட்டினர். தொடர்ந்து, மாலை, 6:00 மணிக்கு உரியடி உற்சவம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவில், கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து, திரளான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.