பேரூர் ஆதினத்தின் 93வது நாண்மங்கல விழா
ADDED :2914 days ago
பேரூர் : கோவை பேரூர் ஆதினம் சாந்தலிங்க ராமசாமி அடிகளாரின், 93வது நாண்மங்கல விழா, தவத்திரு சாந்தலிங்க அடிகள் தமிழ்க்கல்லுாரியில் நேற்று நடந்தது. இதில் குருபூஜை, அபிேஷக அலங்கார பூஜைகள் நடைபெற்றன. மகளிர் வழிபாட்டு குழுவினரின் திருவிளக்கு பூஜையும், பஜனையும் நடந்தன. இதில், சிரவையாதினம் குமரகுருபர அடிகள், பழநி ஆதினம் சண்முக அடிகள், தெஞ்சேரிமலை ஆதினம் முத்துசிவராமசாமி அடிகள் மற்றும் சிவனடியார்கள் மலர்கள் துாவி அருளாசி பெற்றனர்; கல்லுாரி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.