உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேலப்பாளையத்தில் திருக்கல்யாண உற்சவம்

மேலப்பாளையத்தில் திருக்கல்யாண உற்சவம்

சென்னிமலை: சென்னிமலையை அடுத்த, மேலப்பாளையம் ஆதிநாராயண பெருமாள் கோவில் திருக்கல்யாண உற்சவம், நேற்று நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதையொட்டி காலையில் கலச பூஜை, மகா சுதர்சன ஹோமம், சிறப்பு பூஜை, சிறப்பு அபிஷேகம், மஹா தீபாராதனை நடந்தது. மாலையில், சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் இருந்து, 60 நாதஸ்வரம், தவில் இசை கலைஞர்கள் பக்தி இசையுடன், சீர் வரிசை தட்டுகளுடன் ஊர்வலமாக புறப்பட்டனர். முக்கிய வீதிகளில் வந்து மேலப்பாளையம் ஆதிநாரயணப் பெருமாள் கோவில் வந்தடைந்தது. அதை தொடர்ந்து மாப்பிள்ளை திருக்கல்யாண உற்சவம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !